Friday 26th of April 2024 03:36:59 PM GMT

LANGUAGE - TAMIL
-
புதிய திரிவு கொரோனா மிக ஆபத்தானது என்பதற்கு ஆதாரம் இல்லை – WHO!

புதிய திரிவு கொரோனா மிக ஆபத்தானது என்பதற்கு ஆதாரம் இல்லை – WHO!


இங்கிலாந்தில் புதிய வகை திரிவு கொரோனா வைரஸ் வேகமாகக் பரவுவதாகக் கூறப்பட்டாலும் இது மிகவும் ஆபத்தானது என்பதற்கான எந்த ஆரதங்களும் இல்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவும் புதியவரை கொரோனா வைரஸ் குறித்து விளக்கமளிக்கும் வகையில் ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோதே அவா் இவ்வாறு கூறினார்.

புதிய வகை வைரஸ் வேகமாகப் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் அதனைக் கட்டுப்படுத்துவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது எனவும் அவா் கூறினார்.

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை வைரஸ் அபத்தானது என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் இதன் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உலகில் பல நாடுகள் இங்கிலாந்துடனான பயணங்களைத் தடை செய்துள்ளன.

அத்துடன், இங்கிலாந்திலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு, மக்கள் வீடுகளில் இருந்து அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக வெளியேற்த் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய வைரஸ் தொடர்பான விவகாரங்களை நாங்கள் உண்ணிப்பாக அவதானித்து வருகிறோம். புதிய திரிவு வைரஸ் பரிமாற்ற வீதம் அதிகமாக உள்ளதை அவதானிக்க முடிகிறது என கோவிட்19 தொற்று நோய் தொடர்ப்பான உலக சுகாதார அமைப்பின் நிபுணர் மரியா வான் கெர்கோவ் கூறினார்.

எனினும் இந்த திரிவு வைரஸ் அதிகளவு தாங்கங்களை ஏற்படுத்துமா? உயிரிழப்புக்கான சாத்தியங்கள் இதனால் அதிகம் உள்ளதா? என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இதுவரை அது குறித்து அறிவியல் ரீதியில் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

அத்துடன் இந்த திரிவு வைரஸ் தடுப்பு மருந்துகளில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா? என ஆராய்வதாகவும் மரியா வான் கெர்கோவ் தெரிவித்தார்.

இதேவேளை, புதிய வகை கொரோனா வைரஸ் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் அல்லது தடுப்பூசிகளுக்கு சாதகமாகப் பதிலளிக்காது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என உலக சுகாதார அமைப்பு அவசரகால திட்டத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மைக் ரியான் குறிப்பிட்டார். இது வரை இந்த புதிய வைரஸ் குறித்து வெளிவந்துள்ள தகவல்கள் அனைத்துமே அறிவியல் பூா்வமாக உறுதி செய்யப்படாதவை எனவும் அவா் குறிப்பிட்டார்.

தென்னாப்பிரிக்காவில் காணப்படும் கொரோனா வைரஸின் புதிய திரிவு இங்கிலாந்தை ஒத்ததாகக் காணப்படுகிறது என கோவிட்19 தொற்று நோய் தொடர்ப்பான உலக சுகாதார அமைப்பின் நிபுணர் மரியா வான் கெர்கோவ் கூறினார்.

ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி இங்கிலாந்தில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 67,700 -க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். தென்னாப்பிரிக்காவில், 24,691 பேர் இறந்துள்ளனர்.

தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து உலகெங்கிலும் கிட்டத்தட்ட 77 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 1.7 மில்லியன் பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE