Friday 26th of April 2024 10:45:54 AM GMT

LANGUAGE - TAMIL
-
பிரிட்டனில் நேற்று 39,036 பேருக்கு  கொரோனா தொற்று; 574 பேர் மரணம்!

பிரிட்டனில் நேற்று 39,036 பேருக்கு கொரோனா தொற்று; 574 பேர் மரணம்!


பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தின் மத்தியில் நேற்று மேலும் 39,036 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்துடன், 574 கொரோனா மரணங்களும் நேற்று பதிவாகின.

இவற்றுடன் நாட்டில் உறுதி செய்யப்பட்ட மொத்த தொற்று நோயாளர் எண்ணிக்கை 21 இலட்சத்து 88 ஆயிரத்து 587 ஆக அதிரித்துள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கையையும் 69,625 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, பிரிட்டனில் பைசர் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் கடந்த 8-ஆம் திகதி முதல் 20-ஆம் திகதிவரையான காலப்பகுதியில் 616,933 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக நேற்று வியாழக்கிழமை அரசாங்கம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் புதிய வைகை திரிவு கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அங்கு 4 அடுக்கு கட்டுப்பாடுகளை பிரதமர் மந்திரி போரிஸ் ஜோன்சன் கடந்த சனிக்கிழமை அறிவித்தார்.

புதிய திரிவு வைரஸ் கட்டறியப்பட்டதை அடுத்து பிரிட்டனில் தெற்று நோயாளர் தொகை அதிகரித்து வருகிறது. புதிய வைரஸ் முன்னர் பரவியதை விட 70 வீதம் வேமாகப் பரவுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE