Friday 26th of April 2024 05:24:51 AM GMT

LANGUAGE - TAMIL
.
தொற்று நோய் குறித்த செய்திகளை வெளியிட்ட சீன ஊடகவியலாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

தொற்று நோய் குறித்த செய்திகளை வெளியிட்ட சீன ஊடகவியலாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை!


சீனாவின் –வுஹான் நகரத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமாகப் பரவிய காலத்தில் அங்கிருந்தவாறு அது குறித்த செய்திகளை வெளியிட்ட வெகுஜன ஊடகவியலாளர் ஒருவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சீன நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

37 வயதான ஜாங் ஜான் என்ற இந்த பெண் வெகுஜன ஊடகவியலாளர் கொரோனா தொற்று நோயாளர்களால் நிரம்பி வழிந்த மருத்துவமனைகள், அதனைவிட நேரடியாகப் பெற்ற கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பான வெளியிட்டு வந்தார்.

சீன அரசாங்கத்தின் உத்தியோகபூா்வ தகவல்களை விட இவர் வெளியிட்ட செய்திகள் மூலம் சீனாவில் அப்போதிருந்த தீவிர நிலை உலகில் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்நிலையில் உத்தியோகபூா்வமாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களை வெளிக்கொணர்ந்ததன் மூலம் சிக்கல்களை ஏற்படுத்தியதாக அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சீனாவின் ஷாங்காயின் வணிக மையமான புடோங்கில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் இன்று நடந்த வழக்கு விசாரணை சீனா நேரம் மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது. ஜாங்கிற்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தீா்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்தத் தீா்ப்பை எதிர்த்து மேல் முறையிடு செய்யவுள்ளதாக ஜாங்கின் வழக்கறிஞர் ரென் குவானியு தெரிவித்துள்ளார்.

திருமதி ஜாங் தனது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை பயன்படுத்தியதற்காக துன்புறுத்தப்படுவதாக நம்புவதாக அவா் வாதிட்டார்.

சீனாவில் ஏற்பட்ட தொற்று நோய் நெருக்கடியின் உண்மை நிலை வெளியே தெரியாதவாறு அங்கு கடுமையான தணிக்கை முறை அமுலில் இருந்தது. மருத்துவர்கள் உள்ளிட்ட தரப்பினர் உண்மையை வெளிப்படுத்த முடியாத நிர்ப்பந்தத்தில் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே வஹானில் உள்ள நிலைமைகளை வெளியிட்டமைக்காக மே மாத நடுப்பகுதியில் கைது செய்யப்பட்டு ஊடகவியலாளர் ஜாங் தடுத்து வைக்கப்பட்டார். தன்னை விடுவிக்கக் கோரி ஜூன் மாத இறுதியில் ஜாங் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

இதேவேளை, தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது ஜாங் துண்புறுத்தப்பட்டதாகவும் இதனால் அவா் தலைவலி, மனச்சோர்வு, வயிற்று வலி, குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் தொண்டை நோய் போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

அவரை பிணையில் விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பமும் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டது என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE