Wednesday 1st of May 2024 04:57:26 PM GMT

LANGUAGE - TAMIL
-
இரணைதீவில் ஜனாசா புதைக்கும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளாது என்கிறார் டக்ளஸ்!

இரணைதீவில் ஜனாசா புதைக்கும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளாது என்கிறார் டக்ளஸ்!


இரணைதீவில் ஜனாசா புதைப்பு தொடர்பில் அரசாங்கம் அதை செய்யாது என டக்ளஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த விடயத்தை அவர் தெரிவித்தார்.

இரணைதீவு மக்கள் சார்பாக கலந்துகொண்ட பிரதிநிதிகளால் இரணைதீவு பிரதேசம் ஓர் பூர்வீக பிரதேசம் என்றும், 30 வருடங்களிற்கு பின்னர் அந்த இடத்திற்கு சென்றபோதும் அங்கே இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. அங்கு பெரும் காடுகளாக காணப்படுகின்றது.

அவற்றை கத்தி, கோடாளி போன்ற ஆயுதங்களைகொண்டு துப்பரவு செய்ய முடியாதுள்ளது. அதனை இயந்திரங்கள் மூலமே துப்பரவு செய்ய வேண்டி உள்ளது.

இவ்வாறான வசதி குறைபாடுகள் உள்ளபோதும் அந்த பிரதேசத்தில் தொழிலிற்காகவும், பூர்வீக இடத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் அங்கு சென்றுள்ளோம்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களிற்கு முன்னர் இந்த ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவை தெரிவு செய்து அங்கே ஆரம்ப வேலைகளை செய்திருக்கின்றனர். இது எங்களிற்கு மன வேதனையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

அந்த ஜனாசாக்களை அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக நாமும் குரல் கொடுக்கின்றோம். ஆனால் அவர்களின் இடங்களில் அடக்கம் செய்யவேண்டும். இன்றைய தினம், காலைமுதல் இரணைதீவிற்கு செல்வதற்கு கடுமையான தடைகளை கடற்படையினர் விதித்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏதோவொரு விதத்தில் இரணைதீவு தெரிவு செய்யப்பட்டிருக்கும் என்று நம்புகின்றேன். இது தொடர்பில் பிரதமர் மற்றும் சம்மந்தப்பட்டவர்களுடன் பேசியிருக்கின்றேன். இந்த பிரதேசத்தில் அச்சம்பவம் நடைபெறாது என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE