Friday 26th of April 2024 04:18:20 AM GMT

LANGUAGE - TAMIL
.
தளபதி 65 படப்பிடிப்பிற்காக ஜோர்ஜியா சென்றார் இளைய தளபதி விஜய்!

தளபதி 65 படப்பிடிப்பிற்காக ஜோர்ஜியா சென்றார் இளைய தளபதி விஜய்!


இளைய தளபதி நடிக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி65' இன் முதற்கட்ட படப்பிடிப்பு ஜோர்ஜியா நாட்டில் இடம்பெறவுள்ளதை அடுத்து நடிகர் விஜய் ஜோர்ஜியாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் 'தளபதி 65’ படம்இ காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகள் கலந்து தயாராக உள்ளது.

இப்படத்திற்கான பூஜை கடந்த 31ஆம் திகதி இடம்பெற்றிருந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்களிப்பு காரணமாக முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்குவது தாமதமாகியிருந்தது.

நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் நடிகர் விஜய் வாக்களித்து தனது ஜனநாயக கடமையினை ஆற்றியிருந்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பிற்காக ஜோர்ஜியா சென்றுள்ளார். ஜோர்ஜியா செல்வதற்காக, அவர் விமான நிலையம் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தளபதி 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜோர்ஜியாவில் நடைபெற உள்ளது. அதை முடித்துவிட்டு சென்னை திரும்பும் படக்குழு, அடுத்தகட்ட படப்பிடிப்பை மே மாதம் நடத்த உள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE