Friday 26th of April 2024 10:37:32 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழில் 27 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த  கல்வியமைச்சு அனுமதி!

யாழில் 27 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த கல்வியமைச்சு அனுமதி!


யாழ் தீவக பாடசாலைகள் உட்பட மாவட்டத்தில் 27 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் முன்வைத்த கோரிக்கை கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது .

இதற்கான கலந்துரையாடல் 01ம் திகதி் வியாழக்கிழமை கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அங்கஜன் இராமநாதனுக்கும் இடையில் கொழும்பில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட பாடசாலைகளான: 01. நெடுந்தீவு மகா வித்தியாலயம் 02. வேலணை மத்திய கல்லூரி 03. ஊர்காவற்றுறை சென். அந்தோனியார் கல்லூரி 04. காரைநகர் இந்துக் கல்லூரி 05. வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி 06. தெல்லிப்பளை யூனியன் கல்லூரி 07. ஸ்கந்தவரோதயா கல்லூரி 08. ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி – புத்தூர் 09. மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை (பருத்தித்துறை) 10. உடுத்துறை மகா வித்தியாலயம் 11.யாழ் இந்து மகளிர் கல்லூரி 12.கொக்குவில் இந்து கல்லூரி 13.அச்சுவேலி மத்திய கல்லூரி 14.யா/மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம் 15.யாழ்/ கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி 16.வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி 17.பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி 18.உடுப்பிட்டி மகளிர் கல்லூரி 19.உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி 20.தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி 21.அளவெட்டி அருணோதயக் கல்லூரி 22.வயாவிளான் மத்திய கல்லூரி 23.யா/ இராமநாதன் கல்லூரி 24.மானிப்பாய் மகளிர் கல்லூரி 25.சண்டிலிப்பாய் இந்து கல்லூரி 26.விக்டோறியா கல்லூரி 27.காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி

ஆகிய பாடசாலைகள் இவ் வருடம் 2021 ஏப்பிரல் மாதம் நிறைவடைய முன்னர் 2 கட்டங்களை இணைத்து மொத்தமாக 27 பாடசாலைகளையும் தேசிய பாடசாலை ஆக்குவதற்கு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

அத்தோடு யாழ்.மாவட்டத்தின் அதி் கஷ்டப்பட்ட பிரதேசங்களான தீவகம் மற்றம் மருதங்கேணி பகுதிகளின் எதிர்காலக் கல்வியை மேம்படுத்தும் முகமாக விசேட திட்டத்தின் கீழ் தீவகத்தில் புங்குடுதீவு மகா வித்தியாலயம், அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயம், நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளீர் கல்லூரி, ஆகிய 3 பாடசாலைகளும் மருதங்கேணியில் யா / அம்பன் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையையும் விசேட பாடசாலை தரத்திற்க்கு மாற்றப்படவுள்ளது.

இந்த சந்திப்பில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அங்கஜன் இராமநாதன், கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர், கல்வி அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகள், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடமாகாண கல்வி பணிப்பாளர், வலய கல்வி பணிப்பாளர்களும் இணையவழி ஊடாக கலந்து கொண்டனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE