Friday 10th of May 2024 10:21:31 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஐ.நா. பொதுச் செயலாளராக மீண்டும்  தேர்வாகிறார் அன்டோனியோ குட்டரெஸ்!

ஐ.நா. பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வாகிறார் அன்டோனியோ குட்டரெஸ்!


ஐ.நா.வின் பொதுச்செயலாளராக அன்டோனியோ குட்டரெஸ் மீண்டும் தெரிவு செய்யப்படவுள்ளார்.

அன்டோனியோ குட்டரெஸ் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் நிறைவடையவுள்ள நிலையில் அவரை மீண்டும் தெரிவு செய்ய ஐ.நா. பாதுகாப்பு சபை உத்தியோகப்பற்றற்ற கூட்டத்தில் நேற்று பரிந்துரைக்கப்பட்டது.

72 வயதாகும் போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமரான அன்டோனியோ குட்டரெஸ் ஐக்கிய நாடுகள் சபையின் 9-ஆவது பொதுச் செயலாளராக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தில் அன்டோனியோ குட்டரெஸை மீண்டும் பொதுச்செயலாளராக்குவது என 193 உறுப்பினர்கள் ஆதரவுடன் பரிந்துரை முன்வைக்கப்பட்டது.

எதிர்வரும் 18-ஆம் திகதி நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் முறைப்படி அவர் தேர்வு செய்யப்படவுள்ளார். அவரது இரண்டாவது பதவிக்காலம் 2026-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் திகதி வரை தொடரும்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE