Friday 26th of April 2024 03:58:13 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஜூன் 21 வருகிறது தளபதி 65 பெர்ஸ்ட் லுக்!

ஜூன் 21 வருகிறது தளபதி 65 பெர்ஸ்ட் லுக்!


தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்பவர் தான் நடிகர் விஜய். வருகின்ற 22 ஆம் திகதி அவரது பிறந்தநாள். இதனை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தாக ‘தளபதி 65’ பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது.

மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21 ஆம் திகதி மாலை 6 மணிக்கு தளபதி 65 படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE