Friday 26th of April 2024 05:09:14 PM GMT

LANGUAGE - TAMIL
.
தளபதி-65 படத்தின் தலைப்பு மற்றும் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

தளபதி-65 படத்தின் தலைப்பு மற்றும் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!


நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தளபதி-65 திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பெர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார்.

இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வந்தனர். இந்நிலையில் இயக்குனர் நெல்சன் மற்றும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Beast என்று பெயர் வைத்து வெளியிடப்பட்ட இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

விரைவில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE