Friday 26th of April 2024 06:05:53 PM GMT

LANGUAGE - TAMIL
.
இந்தியாவுடனான முதலாவது ஒருநாள் போட்டி: தடுமாறும் இலங்கை அணி!

இந்தியாவுடனான முதலாவது ஒருநாள் போட்டி: தடுமாறும் இலங்கை அணி!


சுற்றுலா இந்திய அணியுடனான ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி தடுமாற்றமான போக்கில் விளையாடி 43 ஓவர்கள் நிறைவில் 201 ஓட்டங்களை பெற்று துடுபபெடுத்தாடி வருகிறது.

இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 43 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்களை பெற்று ஆடி வருகிறது.

அதிகபட்சமாக அசலங்க-38, அவிஸ்க பெர்னாண்டோ-32 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தனர்.

அணித்தலைவர் தசுன் சானக ஆட்டமிழக்காது 38 ஆட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

பந்து வீச்சில் தீபக் ஷாகர், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE