Wednesday 8th of May 2024 06:09:13 PM GMT

LANGUAGE - TAMIL
-
செக்மேட்  என்ற புதிய ரக ஐந்தாம் தலைமுறை  போர் விமானத்தை தயாரிக்கிறது ரஷ்யா!

செக்மேட் என்ற புதிய ரக ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை தயாரிக்கிறது ரஷ்யா!


செக்மேட் (Checkmate) எனப் பெயரிடப்பட்ட எடை குறைந்த புதிய ரக ஐந்தாம் தலைமுறை போர் விமானம் ஒன்றை ரஷ்யா தயாரித்து வருகிறது.

போர் விமான வான்வழிக் கண்காட்சியில் இந்த விமானம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த போர் விமானம், 2023ஆம் ஆண்டு முதல் செயற்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 15 ஆண்டுகளில் இதே போல 300 போர் விமானங்கள் தயாரிக்கப்படும் என ரஷ்யாவின் மத்திய விமான அமைப்பின் தலைவர் யூரி ஸ்லையூசர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மிகவும் மேம்படுத்தப்பட்ட F-35 ரக விமானத்திற்கு போட்டியாக ரஷ்யாவின் இந்த செக்மேட் விமானம் இருக்கும் எனக் கருதப்படுகிறது.

இந்த விமானத்தை எதிரிகளால் அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது என்றும், இதனை செயல்படுத்தும் செலவும் மிகவும் குறைவு என்றும் ரஷ்யாவின் விமான மற்றும் பாதுபாப்பு நிறுவனம் ரஸ்டெக் தெரிவித்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE