Friday 26th of April 2024 03:40:01 AM GMT

LANGUAGE - TAMIL
.
விஜய் பாடிய செல்பி புள்ளை பாடல் புதிய சாதனை!

விஜய் பாடிய செல்பி புள்ளை பாடல் புதிய சாதனை!


நடிகர் விஜய் தனது சொந்த குரலில் பாடி, பட்டி தொட்டியெங்கும் பிரபலமான செல்பி புள்ளை பாடல் புதிய சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் விஜய் தான் நடிக்கும் திரைப்படங்களில் தனது சொந்தக் குரலில் பாடல்களை பாடுவார்.

அவ்வாறு 2014ஆம் ஆண்டு வெளிவந்த கத்தி திரைப்படத்தில் அனிருத் இசையில், செல்பி புள்ளை பாடலை விஜய் பாடியிருந்தார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் விஜய் 2 வேடங்களில் நடித்திருந்த கத்தி தnpரைப்படம் சூப்பர் ஹிட்டானது.

அப்படத்திற்காக விஜய் பாடிய செல்பி புள்ளை பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபல்யமான நிலையில் தற்போது படம் வெளிவந்து 7 ஆண்டுகளின் பின்னர் புதிய சாதனையை படைத்துள்ளது.

செல்பி புள்ளை பாடல் யூரியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இவ்வாறு அதிகளவானவர்களால் தொடர்ந்து விரும்பி கேட்கப்படும் நிலையில் குறித்த மைல் கல்லை எட்டி சாதனை படைத்துள்ளதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE