Friday 10th of May 2024 09:40:09 PM GMT

LANGUAGE - TAMIL
.
உலகின் மிகப் பெரிய ரொக்கெட்டை கட்டமைத்தது ஸ்பேஸ் எக்ஸ்!

உலகின் மிகப் பெரிய ரொக்கெட்டை கட்டமைத்தது ஸ்பேஸ் எக்ஸ்!


அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் முன்னணி வணிக நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) உலகின் மிகப் பெரிய ரொக்கெட்டை கட்டமைத்துள்ளது.

இந்த ரொக்கெட்டில் மொத்தம் இரு பாகங்கள் இருக்கின்றன. ஒன்று ரொக்கெட்டின் மேல் புறமான ஸ்டார்ஷிப் (Starship) இரண்டாவது அடிப்பாகமான பூஸ்டர் (booster) இந்த பூஸ்டரை சூப்பர் ஹெவி என்று அழைக்கிறார்கள்.

இந்த இரண்டும் டெக்ஸாஸ் மாகாணம் -போகா சிகாவில் உள்ள அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவான ஸ்டார்பேஸில் கடந்த வெள்ளிக்கிழமை இணைக்கப்பட்டது.

இந்த ரொக்கெட்டின் தோராய உயரம் 120 மீட்டராகும். இதுவரை ஏவப்பட்ட ரொக்கெட்டுகள் அனைத்தையும் விட இது அதிக உயரமானது.

பூமியில் இருந்து மனிதர்களை நிலவுக்கு அனுப்பிய ரொக்கெட் உருவாக்கிய உந்து விசையை விட, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இந்த ரொக்கெட் இரு மடங்கு அதிக உந்து விசையை உருவாக்கும்.

அப்பல்லோவின் பிரபலமான சாட்டர்ன் V ரொக்கெட்டில் உள்ள இயந்திரங்கள் 35 நியூட்டன் விசையைத் தான் உருவாக்கியது. ஆனால் ஸ்பேஸ் எக்ஸின் இந்த ரொக்கெட் சுமார் 70 நியூட்டன் விசையை உருவாக்கும்.

ஸ்டார்ஷிப் அமைப்பு முழுமையாக கட்டமைக்கப்பட்டால், அது மனிதர்களை நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்துக்குக் கூட அழைத்துச் செல்லும் திறனுடையதாக இருக்கும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்த தசாப்தத்துக்குள் நிலவின் தெற்கு துருவத்துக்கு அருகில் விண்வெளி வீரர்களை தரை இறக்கும் விதத்தில் ஸ்டார்ஷிப்பின் மேல் பாகத்தை உருவாக்குமாறு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தோடு அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE