Tuesday 7th of May 2024 11:22:21 PM GMT

LANGUAGE - TAMIL
-
கடும் மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கை!

கடும் மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கை!


வடக்கு, கிழக்கு, வட மத்திய, ஊவா மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் பலத்த மின்னலுடனும் இடி முழக்கத்துடனும் கூடிய மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக இயற்கை அனர்த்தம் தொர்பான முன்னெச்சரிக்கை நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

2021 செப்டெம்பர் 18ஆம் திகதி முற்பகல் 07.30 மணி வரையான காலப்பகுதிக்காக 2021 செப்டம்பர் 17 ஆம் திகதி பிற்பகல் 02.30 மணியளவில் வெளியிடப்பட்டது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்,

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பொதுமக்கள் பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றுமாறு வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களம் ஆலோசனை வழங்குகிறது.

- உள்ளகப் பகுதிகளில் புகலிடம் தேடுங்கள். மரங்களின் கீழ் ஒரு போதும் நிற்க வேண்டாம்.

- இடி முழக்கத்தின் போது நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள், திறந்த நீர் நிலைகள் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

- இடி முழக்கத்தின் போது கம்பித் தொடர்புள்ள தொலைபேசி மற்றும் மின் இணைப்பிலிருள்ள மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

- துவிச்சக்கரவண்டிகள், உழவியந்திரங்கள், படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

- விழக்கூய மற்றும் விழுந்த மரங்கள், மின்கம்பிகள் குறித்து அவதானமாக இருக்கவும்.

- அவசர உதவிகளுக்கு உங்கள் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE