Thursday 25th of April 2024 10:35:47 PM GMT

LANGUAGE - TAMIL
-
உலகில் மிக உயரமான  பெண் இவர்தான்!

உலகில் மிக உயரமான பெண் இவர்தான்!


உலகில் மிக உயராமான பெண்ணாக துருக்கியைச் சோ்ந்த ருமேசா கெல்கி (Rumeysa Gelgi) என்ற 24 வயதுப் பெண் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

7 அடி 0.7 அங்குலம் ( 215.16 CM) உயரம் கொண்ட இவா், உலகில் தற்போது உயிர்வாழும் பெண்களில் மிக உயரமானவர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவரது இந்த அபார வளர்ச்சிக்கு வீவர் சிண்ட்ரோம் (Weaver syndrome) என்ற அரிய வகை நோயே காரணமாகும். இந்த நோய் துரித வளர்ச்சி மற்றும் பிற அசாதாரண நிலையை ஏற்படுத்துகிறது என கின்னஸ் உலக சாதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 இல் 18 வயதாக இருந்தபோது உலகின் உயரமான பதின்ம வயதுப் பெண்ணாக ருமேசா கெல்கி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார். இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் அவரது உயரம் அளவிடப்பட்டது.

அதீத வளர்ச்சியால் ஏற்பட்ட அசாதாரண உடல் நிலை காரணமாக ருமேசா கெல்கி சக்கர நாற்காலி உதவியுடனேயே நடமாடுகிறார்.

எந்தவொரு நிலையையும் அது குறைபாடாக இருந்தால் கூட அதனை நேர்மறையாக எடுத்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நன்மை பயக்கும். நீங்கள் யார்? எப்படியிருக்கிறீர்களோ உங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். குறைபாடுகளைப் பொருட்படுத்தாமல் உங்களுக்குள் இருக்கும் தனித் திறன்கள் குறித்து அறிந்துகொண்டு அதனை வெளிப்படுத்துங்கள் என தனது கின்னஸ் சாதனை குறித்து ருமேசா கெல்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

என்னுடைய அதீத உயரம் பிறரது கவனத்தை என்பால் ஈர்க்கிறது. பெரும்பாலானவர்கள் என்னுடன் கனிவாக பேசுகின்றனர். எனக்கு ஆதரவாக இருக்கின்றனர் எனவும் அந்த அறிக்கையில் ருமேசா கெல்கி குறிப்பிட்டுள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE