Friday 26th of April 2024 05:54:00 PM GMT

LANGUAGE - TAMIL
-
தளபாட உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ!

தளபாட உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ!


அத்தனகல்ல - ஊராபொல பகுதியில் உள்ள தளபாட உற்பத்தி தொழிற்சாலை ஒன்றின் களஞ்சியசாலையொன்றில் பாரிய தீ ஏற்பட்டுள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லையென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுமார் 2 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட குறித்த களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயினால் அங்குக் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கதிரைகள் (சோஃபா) தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு சம்பவ இடத்துக்குத் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், தீவிரமான தீயணைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE