Friday 26th of April 2024 10:35:21 PM GMT

LANGUAGE - TAMIL
.
2வது அரையிறுதி; அவுஸ்ரேலியாவுக்கு வெற்றி இலக்கு - 177!

2வது அரையிறுதி; அவுஸ்ரேலியாவுக்கு வெற்றி இலக்கு - 177!


ரீ-20 உலகக் கிண்ண தொடரின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் அவுஸ்ரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 177 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் அணி.

2வது அரையிறுதி ஆட்டத்தில் குழு-01 இல் இருந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்த பாகிஸ்தான் - அவுஸ்ரேலிய அணிகள் விளையாடி வருகின்றன.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலிய அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச் பாகிஸ்தான் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.

இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அதிகபட்சமாக மொஹமட் ரிஷ்வான் - 67, பாபர் அஸாம் 39 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்திருந்தார். பஹர் ஷமன் ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

177 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்ரேலிய அணி சற்று முன்னர் வரை 3 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 13 ஓட்டங்களுடன் ஆடிவருகிறது.

அணித்தலைவர் ஆரேஞ் பிஞ்சை முதல் பந்திலேயே ஓட்டமெதனையும் பொறாத நிலையில் அப்ரிடி ஆட்டமிழக்கச் செய்திருந்தார்.

ரீ-20 உலகக் கிண்ண நடப்பு தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காத ஒரே அணியாக பலம்வாய்ந்த அணியாக பாகிஸ்தான் திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: ஆஸ்திரேலியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE