Friday 10th of May 2024 10:16:42 PM GMT

LANGUAGE - TAMIL
-
சனக் கூட்டத்துக்குள்  தாறுமாறாக ஓடிய கார் மோதி  அமெரிக்காவில் சிலர் பலி; 20-க்கு மேற்பட்டோர் காயம்!

சனக் கூட்டத்துக்குள் தாறுமாறாக ஓடிய கார் மோதி அமெரிக்காவில் சிலர் பலி; 20-க்கு மேற்பட்டோர் காயம்!


அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் கிறிஸ்துமஸ் அணிவகுப்பொன்றின்போது மக்கள் கூட்டத்துக்குள் தாறுமாறாக ஓடிய வாகனம் மோதியதில் சிலர் உயிரிழந்ததுடன், 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க நேரப்படி மாலை 4:30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சில உயிரிழப்புகள் நடந்ததாக விஸ்கான்சின் மாகாண பொலிஸ் தலைவர் டான் தோம்சன் செய்தியாளர்களிடம் கூறினார்.

காயமடைந்த 11 பெரியவர்கள் மற்றும் 12 சிறுவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து கூட்டத்துக்கு புகுந்து மோதித் தள்ளிய சிவப்பு நிற SUV கார் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் விஸ்கான்சின் மாகாண பொலிஸ் தலைவர் டான் தோம்சன் குறிப்பிட்டார்.

இதேவேளை, கார் மோதி இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவா்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் விபரங்களை உடனடியாக வெளியிட முடியாது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE