Thursday 20th of January 2022 07:24:49 AM GMT

LANGUAGE - TAMIL
-
அணு ஆயுதங்களை மேம்படுத்துகிறதா சீனா?  அமெரிக்காவில் குற்றச்சாட்டுக்குக்கு மறுப்பு!

அணு ஆயுதங்களை மேம்படுத்துகிறதா சீனா? அமெரிக்காவில் குற்றச்சாட்டுக்குக்கு மறுப்பு!


சீனா தனது அணு ஆயுத திறன்களை விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை சீன வெளியுறவு அமைச்சின் ஆயுதக் கட்டுப்பாட்டுத் துறை தலைமை பணிப்பாளர் பு கொங் (Fu Cong) மறுத்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான குறைந்தபட்ச அணு ஆயுதங்களையே சீனா பராமரித்து வருவதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பு கொங் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதப் பரவல் தடுப்பு மற்றும் அணு ஆயுதப் போா் தடுப்பு தொடா்பாக 5 நாடுகள் இணைந்து கூட்டறிக்கை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டன. இதில் சீனா முக்கிய பங்கு வகித்ததாகவும் அவா் சுட்டிக்காட்டினார்.

அணு ஆயுத நாடுகளான அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து ஆகியன இணைந்து அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் தொடர்பான கூட்டறிக்கையை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டன. அணு ஆயுதப் பரவல் தடை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபை நிரந்தர உறுப்பினர்களாக உள்ள இந்த 5 நாடுகளும் இணைந்து வெளியிட்ட முதல் அறிக்கை அதுவாகும்.

அதில் அணு ஆயுதத்தைக் கொண்டுள்ள நாடுகள் தங்களுக்கு இடையிலும் பிற நாடுகள் மீதும் அணு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்பது மிக முக்கிய கடப்பாடு என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தை பின்பற்றுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அணு ஆயுதங்களை பயன்படுத்துவது பரந்த அளவில் பின்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, தற்போது உள்ள அணு ஆயுதங்களை தற்காப்புக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அணு ஆயுதங்கள் மென்மேலும் உருவாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். அணு ஆயுதப் போரில் வெற்றி பெற முடியாது. அந்தப் போரில் ஒருபோதும் ஈடுபடக் கூடாது எனவும் அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க சீனா தனது அணு ஆயுதங்களை வேகமாக அதிகரித்து வருவதாகவும், 2030-ஆம் ஆண்டுக்குள் சீனாவிடம் 1,000 அணு ஆயுதங்கள் இருக்கும் எனவும் அமெரிக்க பாதுகாப்புத் துறை கடந்த நவம்பரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.

இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட சீன வெளியுறவு அமைச்சின் ஆயுதக் கட்டுப்பாட்டுத் துறையின் தலைமை பணிப்பாளர் பு கொங், அமெரிக்காவின் குற்றச்சாட்டக்களை முற்றாக மறுப்பதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, , சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து ஆகியன இணைந்து வெளியிட்ட அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் தொடர்பான கூட்டறிக்கையை சீன வெளியுறவு இணை அமைச்சா் மா ஜாவோக்ஸு பாராட்டியுள்ளார்.

இந்த உடன்படிக்கை ஒரு நோ்மறையான நடவடிக்கை. இந்த உறுதியான அறிக்கையை 5 நாடுகளும் வெளியிடுவதற்கு சீனா முக்கிய பங்கு வகித்தது. பரஸ்பர நம்பிக்கைக்கான புதிய தொடக்கப் புள்ளியாகவும், யார் பெரியவர்? என்ற போட்டிக்கு மாற்றாகவும் இந்தக் கூட்டறிக்கையை 5 நாடுகளும் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவா் கூறினார்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE