Wednesday 8th of May 2024 11:32:13 AM GMT

LANGUAGE - TAMIL
.
போதைப் பொருட்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற 193 பேர் கைது!

போதைப் பொருட்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற 193 பேர் கைது!


போதைப் பொருட்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற 193 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகி சுமார் இரண்டு மாத காலத்துக்குள் போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற சுமார் 193 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிவனொளி பாதமலைக்கு போதை பொருட்கள் கொண்டு செல்வதனை தடுப்பதற்காக ஹட்டன் பொலிஸ் கோட்டத்திற்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பலங்கொடை பொகவந்தலா, நோர்வூட் மஸ்கெலியா, தியகல நோர்ட்டன் உள்ளிட்ட பிரதான வீதிகளில் பல இடங்களில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்னர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கேரள கஞ்சா, போதை மாத்திரைகள், தடைசெய்யப்பட்ட சிகரட்டுக்கள், மதன மோதகம், ஹெரோயின், உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்க்ப்பட்டுள்ளன.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது ஸ்டூட் என்ற பொலிஸ் மோப்பநாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நாயின் உதவியுடன் சுமார் 87 போதை பொருட்கள் வைத்திருந்த நபர்களை ஹட்டன் பொலிஸார் மாத்திரம் கைது செய்துள்ளதாகவும் கடந்த காலங்களில் ஹட்டன் பொலிஸ் நிலையத்திலிருந்து கோரா என்ற நாயின் குறைப்பாட்டினை தற்போது உள்ள ஸ்டூட் மோப்ப நாய் நிவர்த்தி செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, நேற்றைய தினம் (25) ஹட்டன் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சிவனொளிபாதமலை யாத்திரை செய்வதற்காக கேரள கஞசாவுடன் சென்ற 13 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இவர்களை ஹட்டன் நீதவான் முன்னலையில் இன்று ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்து வருகை தந்தவர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானவர்கள் 22 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE