Thursday 20th of January 2022 07:28:48 AM GMT

LANGUAGE - TAMIL
.
நியூயோர்க் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் பலி!

நியூயோர்க் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் பலி!


நியூயோர்க் நகரத்தின் தி பிராங்க்ஸ் பரோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 09 சிறுவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். அத்துடன் டசின் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என நியூயோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்தார்.

கட்டடத்தில் இருந்த ஹீட்டர் ஒன்றில் இருந்து தீ பரவி இருக்கலாம் எனக் கூறிய அவர், இது அளவிட முடியாத சோகம் எனக் குறிப்பிட்டார்.

கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் இருந்து தீ பரவத் தொடங்கி கட்டடம் முழுவதும் பரவியது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலர் தீயில் கருகி உயிரிழந்ததுடன், மேலும் சிலர் புகை காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக நகரின் தீயணைப்புத் துறை ஆணையர் டேனியல் நிக்ரோ செய்தியாளர்களிடம் கூறினார்.

கட்டத்தில் உள்ள வீடொன்றின் படுக்கை அறையில் உள்ள ஒரு சிறிய மின்சார ஹீட்டரில் இருந்து தீ பரவி இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவம் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்காக அமைக்கப்பட்ட நகரப் பகுதி அடுக்குமாடிக் குடியிருப்புகளின் பாதுகாப்புத் தரங்கள் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

கடந்த புதன்கிழமை அதிகாலை பிலடெல்பியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடத்தில் தீ பரவியதில் 08 சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்த நிலையில் இந்த வாரம் அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய தீ விபத்தாக நேற்றைய சம்பவம் பதிவாகியுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா, நியூ யோர்க்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE