Friday 26th of April 2024 03:07:03 PM GMT

LANGUAGE - TAMIL
-
இரண்டாம் நாள் முடிவில்  இலங்கை அணி 466 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது!

இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி 466 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது!


இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று (05) இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இந்தப் போட்டி இந்தியாவின் மொஹாலியில் நடைபெற்று வருகிறது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 574 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இந்திய அணி சார்பில் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ரவீந்திர ஜடேஜா 175 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

ரிசப் பந்த் 96 ஓட்டங்களையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 61 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் எம்புல்தெனிய, சுரங்க லக்மால் மற்றும் விஷ்வ பெர்ணான்டோ ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE