Wednesday 5th of February 2025 02:41:25 AM GMT

LANGUAGE - TAMIL
-
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி கொழும்பில்  கையெழுத்து பிரச்சாரம் - பெருமளவானோர் ஆதரவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி கொழும்பில் கையெழுத்து பிரச்சாரம் - பெருமளவானோர் ஆதரவு!


பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இடம்பெற்றுவரும் கையெழுத்து பிரச்சாரம் கொழும்பில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகி இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக இடம்பெற்றது.

மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்று கையெழுத்திட்டனர்.

கொழும்பில் இன்று இடம்பெறும் கையெழுத்துப் போராட்டத்தில் அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு சா்வஜன நீதி (JUSTICE FOR ALL) என்ற அமைப்பின் ஊடான அதன் இணைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE