Friday 3rd of May 2024 07:22:33 AM GMT

LANGUAGE - TAMIL
.
விமல், கம்மன்பிலவை அரசிலிருந்து வெளியில் விடாதீர்கள்! - திலும் திடீர் 'பல்டி'!

விமல், கம்மன்பிலவை அரசிலிருந்து வெளியில் விடாதீர்கள்! - திலும் திடீர் 'பல்டி'!


"தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகிய இருவரையும் அரசில் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான சமரசப் பேச்சுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்."

- இவ்வாறு போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

"நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை மட்டும் கருதி, சில தரப்புகளால் முன்வைக்கப்படும் யோசனைகளை எல்லாம் ஏற்றுச் செயற்பட முடியாது. ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சி அரசியலில் இருந்து வெளியேறுவதாக இருந்தால் வெளியேறட்டும். அதனை நாம் தடுக்கவில்லை. ஆனால், விமல், கம்மன்பில போன்றவர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

மைத்திரிபால சிறிசேன வழமைபோல் தனது வேலையை விமல், கம்மன்பில போன்றவர்களுக்கும் காண்பித்துவிட்டார்.

பங்காளிக் கட்சிகளின் மாநாட்டுக்கு வருகை தந்த அவர், பங்காளிக் கட்சிகள் நடத்திய ஊடக சந்திப்புக்கு வரவில்லை. எனவே, நம்ப வைத்துக் காலைவாரிவிட்டார்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE