Monday 6th of May 2024 11:41:51 AM GMT

LANGUAGE - TAMIL
.
குலதெய்வம் கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வழிபாடு

குலதெய்வம் கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வழிபாடு


தமது குலதெய்வம் கோயிலில் நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் இன்றைய தினம் தமது குலதெய்வம் கோயிலில் வழிபாடு நடத்தியுள்ளனர்.

தமிழ்நாடு லால்குடி அருகே உள்ள குலதெய்வ கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர்.

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

நடிகை நயன்தாரா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதையடுத்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பல்வேறு கோவில்களுக்கு ஒன்றாக சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இன்று அவர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதற்காக நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு காலை 11.40 மணிக்கு வந்தனர்.

இதையடுத்து அவர்கள் லால்குடி அருகே உள்ள விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலில் வழிபாடு நடத்தினர்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE