Saturday 4th of May 2024 07:26:14 PM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கை அணியின் வேகபந்துவீச்சு பயிற்றுவிப்பு ஆலோசகராக லசித் மாலிங்க நியமனம்!

இலங்கை அணியின் வேகபந்துவீச்சு பயிற்றுவிப்பு ஆலோசகராக லசித் மாலிங்க நியமனம்!


அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான இலங்கை அணியின் வேகபந்துவீச்சு பயிற்றுவிப்பு ஆலோசகராக முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் முதலாவது இருபதுக்கு20 போட்டி எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, இந்த தொடர்களுக்கான பற்றுச்சீட்டுக்களின் விலைகள் அடங்கிய பட்டியலை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்க பற்றுச்சீட்டுக்கள் 300, 1,500 2,500 4,000 5,000 ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்படும்.

அத்துடன், கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டரங்க பற்றுச்சீட்டுக்கள் 300, 2,000 4,000 5,000 6,500 ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்படும்.

மேலும்,காலி சர்வதேச விளையாட்டரங்க பற்றுச்சீட்டுக்கள் 300, 500, 1,000 5,000 7,500 ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்படும் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE