Thursday 25th of April 2024 09:34:07 PM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா
அமெரிக்காவில் கொரோனாவால் நேற்று   1,169 போ்  மரணம்!

அமெரிக்காவில் கொரோனாவால் நேற்று 1,169 போ் மரணம்!


அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1,169 போ் உயிரிழந்துள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளனா்.

உலகில் ஓரே நாளில் பதிவான கொரோனா வைரஸ் உயிரிழப்பாக இது பதிவாகியுள்ளது.

இத்தாலியில் கடந்த மார்ச் 27-ஆம் திகதி ஒரே நாளில் 969 பேர் இறந்தனர். இதுவே ஒரு நாட்டில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பாக பதிவாகியிருந்தது.

இந்நிலையில் அதனைக் கடந்து ஒரு நாளில் 1,169 உயிர்களை அமெரிக்காவில் பலியெடுத்துள்ளது கொரோனா வைரஸ்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இதுவரை அமெரிக்கா 5,926 கொரோனா வைரஸ் இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.

உலகளவில், இத்தாலியில் 13,915 பேர் இறந்துள்ளனர், ஸ்பெயினில் 10,003 போ் மரணமடைந்துள்ளனா்.

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் புதிதாகத் தொற்றுக்குள்ளாகி கண்டறியப்பட்டனா்.

இவற்றுடன் அமெரிக்காவில் மொத்த கொரோனா வைரஸ் தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை 243,000 க்கும் அதிகமாக உள்ளது என்று ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுத் தளம் கூறுகின்றது.

இதன்மூலம் உலகளவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளா்களில் கிட்டத்தட்ட கால் பங்கினரை அமெரிக்கா கொண்டுள்ளது.

நியூயோர்க் நகரம் அமெரிக்க தொற்றுநோயின் மையப்பகுதியாக உள்ளது, இங்கு 1,500 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன. 50 ஆயிரம் போ் தொற்றுக்குள்ளாகி உறுதி செய்யப்பட்டுள்ளனா்.

அமெரிக்காவில் இதுவரை 13 இலட்சம் பேரிடம் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மு்ன்னெடுக்கப்பட்டுள்ளதாக, துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் வியாழக்கிழமை வைரஸ் தொற்று நிலை குறித்து அறிவிக்கும் நாளாந்த செய்தியாளா் மாநாட்டின்போது நேற்று தெரிவித்தார்.

நாங்கள் இப்போது ஒரு நாளைக்கு 100,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்தி வருகிறோம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறி்ப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் 100,000 முதல் 240,000 பேர் உயிரிழக்கக் கூடும் என வெள்ளை மாளிகை கணிப்புகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE