Friday 26th of April 2024 02:44:26 PM GMT

LANGUAGE - TAMIL
அஜித்குமார் 1.25 கோடி உதவி!
கொரோனா நிதியத்திற்கு நடிகர் அஜித்குமார் 1.25 கோடி உதவி!

கொரோனா நிதியத்திற்கு நடிகர் அஜித்குமார் 1.25 கோடி உதவி!


கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கா கொரோனா நிவாரண நிதியத்திற்கு நடிகர் அஜித்குமார் 1.25 கோடி நிதியை வழங்கியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறபிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனால் நாளாந்தம் கூலி வேலை செய்து வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வந்த கோடிக்கணக்கானவர்களது நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இவ் இடரை போக்கும் வகையில் நாடாளவிய ரீதியில் நிவாரண நிதியம் ஒன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து அறிவித்திருந்தார்.

இந்தியளவில் பல பிரபலங்கள் அந்நிதியத்துக்கு தாமாக முன்வந்து நதி உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இருந்து முதல் நபராக நடிகர் அஜித்குமார் பிரதமர் நிவாரண நிதியத்துக்கு 50 இலட்சம் (இந்திய மதிப்பில்) வழங்கியுள்ளார்.

அத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் நிதியத்துக்கு 50 இலட்சமும் (இந்திய மதிப்பில்) திரைப்படத் தொழிலாளர் அமைப்பான பெப்சி தொழிலாளர்களுக்கு 25 இலட்சமும் (இந்திய மதிப்பில்) என மொத்தமாக 1.25 கோடி (இந்திய மதிப்பில்) ரூபாவை கொரோனா நிதியத்துக்காக நடிகர் அஜித்குமார் வழங்கிவைத்துள்ளார்.


Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE