Friday 26th of April 2024 11:48:53 PM GMT

LANGUAGE - TAMIL
சுகாதார பணியாளா்கள்
கொத்துக்-கொத்தாய் செத்துவிழும் நோயாளிகளால்  சுகாதார பணியாளா்கள் உளவில் ரீதியாகப்  பாதிப்பு!

கொத்துக்-கொத்தாய் செத்துவிழும் நோயாளிகளால் சுகாதார பணியாளா்கள் உளவில் ரீதியாகப் பாதிப்பு!


இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளி்ட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸால் தினமும் நூற்றுக்கணக்கானவா்கள் கண்முன்னே கொத்தக் –கொத்தாக செத்துமடியும் நிலையில் இங்குள்ள மருத்துவா்கள், தாதியா்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளா்கள் உளவியல் ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொண்டுவருவதாக ஆய்வொன்று கூறுகிறது.

உலகெங்கும் இன்றுவரை 15 இலட்சத்துக்கு மேற்பட்டவா்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அத்துடன் உலகெங்கும் உயிரிழந்தவா்களின் எண்ணக்கை 84 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

கொரோனாவால் ஐரோப்பிய நாடுகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் மட்டும் ஏழு இலட்சத்து, 50 ஆயிரத்துக்கு மேற்பட்டவா்கள் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ்,ஜேர்மனி ஆகிய நாடுகளில் தலா ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவா்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனா்.

இத்தாலியில் 17 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனா். ஸ்பெயினில், 14 ஆயிரத்துக்கு மேற்பட்டவா்கள் பலியாகியுள்ளனா்.

இந்நாடுகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் நோயாளா்களால் நிரம்பி வழிகின்றன. தினந்தினம் ஆயிரத்தை நெருங்கும் நோயாளா்கள் இங்கு உயிரிழந்து வருகின்றனா்.

கண்ணுக்குமுன்னே தினந்தினம் நூற்றுக்கணக்காணவா்கள் செத்துமடியும் நிலையில் முன்னணியில் நின்று பணியாற்றிவரும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனா் என ஆய்வுகள் கூறுகின்றன.

மன நல மருத்துவர்கள் மற்றும் சமூக தொண்டு நிபுணர்கள் இவா்களுக்கு உளநல ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

பகல், இரவு பாராமல் நோயாளிகளைக் கவனிக்கவேண்டிய கடும் அழுத்தத்துக்கு மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளாகியுள்ளனா்.

நோயாளிகளை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்புடன், அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் அவா்களின் முயற்சி பலனின்றி தினந்தோறும் நூற்றுக்கணக்கானவா்கள் இறந்துபோகின்றனா்.

இதனால் முன்னணி மருத்துவப் பணியாளா்கள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுகின்றனா்.

இதைத் தவிர, குடும்பத்தாரையும் சந்திக்க முடியாமல் அவா்கள் தனிமையில் இருக்க வேண்டியுள்ளது. இது, அவர்களுடைய மன உறுதியை குலைத்து விடுகிறது.

சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் சிலரும் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்ததுடன், பலா் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இத்தாலியில் மட்டும், மருத்துவ துறையைச் சேர்ந்த, 13 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை, 90 மருத்துவா்கள் , 29 செவிலியா்கள் இறந்துள்ளனர்.

அதிக நேரம் பணியாற்றுவதால் ஏற்படும் உடல் சோர்வைவிட, மன சோர்வு அவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

இந்நிலையில் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களை ஊக்குவிக்கும் வகையில்தொடர்ந்து அவர்களுக்கு மன நல ஆலோசனைகளை அளித்து வருகிறோம் எனவும் அந்நாட்டு உளநல அமைப்புக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் தெரிவித்துள்ளனா்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE