Tuesday 19th of March 2024 12:18:58 AM GMT

LANGUAGE - TAMIL
இலங்கையில்
நாடு திரும்பிய ஆறு பேர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாடு திரும்பிய ஆறு பேர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!


இலங்கையில் நேற்று (ஜூன்-1)பத்து பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு நேற்று (ஜூன்-1) பின் இரவு 10.30 மணி வரையான நிலவரங்களின் அடிப்படையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் நேற்று இனம் காணப்பட்ட 10 தொற்றாளர்களுடன் மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 1,643 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு நேற்று புதிதாக தொற்றுக்குள்ளான 10 பேர் தொடர்பான விபரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளது. அதனடிப்படையில்,

பங்களாதேஷில் இருந்து அண்மையில் நாடு திரும்பியிருந்த நிலையில் தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தோனேசியாவில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய நிலையில் பெல்வெரா தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்த ஒருவர் மற்றும் பொலாரஸ் நாட்டில் இருந்து திரும்பிய நிலையில் தியகம தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவர் என வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இது தவிர முல்லைத்தீவு கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த கடற்படை மாலுமி ஒருவர் மற்றும் கல்பிட்டியவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படை சிப்பாய் ஒருவர் என இரண்டு கடற்படையினரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

ஏனைய இருவரும் இராஜகிரிய ஆயுர்வேத நிலையத்தில் தனிமைப்படுத்தப் பட்டிருந்தவர்கள் எனவும்இ நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக உறுதிசெய்யப்பட்டிருந்த இராணுவ சிப்பாயுடன் தொடர்பு பட்டவர்கள் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு நேற்று புதிதாக தொற்றுக்குள்ளானவர்களில் ஆறு வெளிநாட்டினரும், இரண்டு கடற்படையினரும் உள்ளடங்குகின்றனர்.

தொற்றுக்குள்ளான கடற்படையினரது எண்ணிக்கை 764!

நேற்று இரண்டு கடற்படையினருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 764 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 411 கடற்படையினர் குணமடைந்து திரும்பிய நிலையில் தற்போது 353 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 811 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில்இ இதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன்இ தற்போது 821 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனைகளில் 65 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE