Friday 26th of April 2024 10:04:28 PM GMT

LANGUAGE - TAMIL
இலங்கையில்
கொரோனா தொற்றுக்கு உள்ளான 162 பேர் தொடர்ந்தும் சிகிச்சையில்!

கொரோனா தொற்றுக்கு உள்ளான 162 பேர் தொடர்ந்தும் சிகிச்சையில்!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் தற்போது 162 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் இரு தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதை அடுத்து மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 2076 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் நேற்றைய தினம் மேலும் 18 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை பூரணமாக குணடைந்தவர்களது எண்ணிக்கை 1903 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு குணமடைந்தவர்களில் 885 கடற்படையினரும் உள்ளடங்கியிருப்பதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பலனின்னறி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் 162 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE