Saturday 27th of April 2024 12:19:54 AM GMT

LANGUAGE - TAMIL
-
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின்  திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!


வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகியுள்ள நிலையில் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் சுகாதார நடைமுறையினை கடைப்பிடித்து ஆலய வழிபாடுகளில் மேற்கொள்ள முடியும்.

அதற்காக ஆலயத்தில் சுகாதார நடைமுறைகள் தொடர்பான விடயங்களை கண்காணிப்பதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபடுவார்கள். அத்துடன் இம்முறை ஆலய திருவிழாவின் போது அன்னதானம், காவடி நேர்த்திக்கடன் போன்றவற்றுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது., இவ்வாறு மாநகர சபையின் பிரதி மேயர் து.ஈசன். யாழ் மாநகர சபையில் இன்றைய தினம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆலயத்திற்கு வரும் பக்தர்களை மட்டுப்படுத்துவது தரப்பில் எந்த விதமான நடவடிக்கையும் சாத்தியமாகவில்லை. குறிப்பாக ஆலயத்திற்கு பக்தர்களின் எவ்வளவு தொகைக்கு மேல் வருகிறார்கள் அவர்களை நாங்கள் அனுமதிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

இது வரலாற்றுப் பிரசித்திபெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா. குறிப்பாக ஆலய வளாகத்தில் இம்முறை கடைகள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கலைநிகழ்வுகள் சொற்பொழிவுகள் இதர சமயம் சார்ந்த பஜனை நிகழ்வுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே ஆலயத்துக்கு வருபவர்கள் சுகாதார நடைமுறையினை கடைப்பிடிப்பதன் மூலம் நாங்கள் இந்த தொற்று நோயிலிருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

குறிப்பாக ஆலய திருவிழாவின் போது சமூக விடை வெளியிணை பேணுதல் மிகவும் அவசியமானது. சுகாதார நடைமுறையினை கண்காணிப்பதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிசார் கடமையில் ஈடுபடுவார்கள். ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் முகக் கவசம் அணிதல் அத்துடன் ஆலயத்தின் சுற்றாடலில் அமைக்கப் பெற்றுள்ள நீர்க்குழாயில் கைகளைக் கழுவுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25ஆம் தேதி ஆலயத்தின் திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகி உள்ளன. இம்முறை கொரோனா தொற்று காரணமாக கடைகள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநகர சபைக்கு வர வேண்டிய 20 மில்லியன் ரூபா வருமானம் இழப்பு ஆகியுள்ளது.

நாங்கள் வருமானத்தினை பார்க்கவில்லை மாறாக பொதுமக்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம். எனவே யாழ் மாநகர சபை எடுத்திருக்கும் இந்த முடிவுக்கு அனைத்து பக்தர்களும் தமது ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், நல்லூர்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE