Friday 26th of April 2024 12:27:02 AM GMT

LANGUAGE - TAMIL
-
நல்லூர் செல்லும் பக்தர்கள் பின்பற்றவேண்டியவை தொடர்பில் அறிவுறுத்தல்!

நல்லூர் செல்லும் பக்தர்கள் பின்பற்றவேண்டியவை தொடர்பில் அறிவுறுத்தல்!


வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ள நிலையில் உற்சவத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

பொலிஸார் இராணுவத்தினர் மற்றும் மாநகர சபையினால் குறித்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இராணுவத்தினர் ஆலயத்தின் வெளி வீதிகளில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதோடு 650 க்கும் மேற்பட்ட பொலிஸார் சிவில் மற்றும் சீருடையில் கடமைக்குட்படுத்தப்பட வுள்ளார்கள்

இம்முறை கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக இம்முறைஆலய உற்சவமானது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கட்டுப்பாட்டுடன் இடம்பெறவுள்ளது ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் போலீசாரால் அடையாள அட்டை பரிசோதிக்கபட்டபின்னரே கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பவுள்ளார்கள் அத்தோடு சுகாதார நடைமுறைகள் மிகவும் இறுக்கமான முறையில் கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகள் போலீஸ் இராணுவம் மற்றும்சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்படவுள்ளன

அதாவது ஆலயத்துக்கு வரும் அடியவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வரவேண்டும் அத்தோடு கைகளை நன்றாக கழுவிய பின்னரே ஆலயத்திற்குள்செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

அத்தோடு சமூக இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

உற்சவத்தின்போது வழமையாக அடியவர்களால் மேற்கொள்ளப்படும் அங்கப்பிரதட்சணத்திற்கு இம்முறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

மாநகர சபையின் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலின்படி அதிகளவில் மக்கள் ஆலயத்திற்கு ஒன்று கூடுவதை தவிர்த்து வீடுகளிலிருந்து ஆலய உற்சவத்தின் தொலைக்காட்சிகள் மூலமாக பார்வையிடுவதன் மூலம் குறித்த ஆலய உற்சவத்தின் தொடர்ந்து 25 நாட்களும் நடாத்த முடியும்.

ஏனெனில் நல்லூர் ஆலயத்திற்கு நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் இருந்து மக்கள் வருவது வழமை அதேபோல் வெளிநாடுகளிலிருந்து கூட ஆலயத்திற்கு வருவார்கள் அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் மூலமாக ஏதாவது கொரோனா தொற்று ஏற்பட்டால் ஆலய உற்சவத்தை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவே ஆலயத்திற்கு அடியவர்கள் பெருமளவில் வருகைதராது வீடுகளிலிருந்து ஆலயஉற்சவத்தினைதரிசிக்கமுடியும்.

அதேபோல வழமைபோன்று நல்லூர் ஆலயத்தை சூழ உள்ள வீதிகள் அனைத்தும் பொது போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்திற்கான மாற்று வழிகளும் யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் போலீசாரினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன..


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், நல்லூர்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE