Friday 26th of April 2024 08:18:52 PM GMT

LANGUAGE - TAMIL
-
தமிழ்சிங்கள பிரச்சனைகளிற்கு பிக்குகளே முதன்மைகாரணம்!! விடுதலைப்புலிகள் மக்கள்பேரவை!!

தமிழ்சிங்கள பிரச்சனைகளிற்கு பிக்குகளே முதன்மைகாரணம்!! விடுதலைப்புலிகள் மக்கள்பேரவை!!


தமிழர்களிற்கும் சிங்களவர்களிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கு ஆட்சியாளர்களைவிட பௌத்தபிக்குகளே காரணம். என்று விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் பிரதித் தலைவர் செ.அரவிந்தன் தெரிவித்தார்.

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

சமஸ்டியை கோரினால் வடகிழக்கில் இரத்த ஆறு ஓடும் என்று பௌத்ததுறவிகள் தெரிவிக்கின்றனர். உண்மையில் சமஸ்டிதொடர்பான அறிவற்றவர்களாகவே அவர்கள் இருக்கின்றனர். 1926இல் சமஸ்டியை முதல்முதலாக கோரியது சிங்கள மக்கள்தான். பண்டாரநாயக்கவும் அது தொடர்பான முன்மொழிவுகளைவைத் திருத்திருக்கின்றார்.

எனவே சமஸ்டி தொடர்பான அறிவற்றவர்களாக அரசியல் மேடைகளிலே அவர்கள் பேசுவது அவர்களின் துறவறத்திற்கு துரோகம் இழைப்பதாகவே பார்க்கமுடியும்.

இந்த நாட்டில் இனக்கவலவரங்களை முன்னெடுத்ததிலே பௌத்தபிக்குகள் தான் பிரதான இடத்தினை வகித்திருந்தார்கள்.

தமிழர்களிற்கும் சிங்களவர்களிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கு சிங்கள மக்கள் மற்றும் ஆட்சியாளர்களைவிட பௌத்த பிக்குகளே அதிகமான காரணமாக இருந்துள்ளார்கள். அரசியல் கருத்துக்களை கூறுவது துறவிகளின் செயற்பாடு அல்ல. அத்துடன் அவ்வாறான துறவிகளிற்கு அரசினால் பல வசதிகளும்செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

எனவே அறம் சார்ந்து அன்பைபோதிக்கும் கருத்துக்களை அவர்கள் முன்வைக்க வேண்டும். சிங்களமக்கள் இந்தவிடயத்தில் ஏமாறக்கூடாது. விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு சமஸ்டிக்கொள்கையில் உறுதியுடன் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால் இன்று அந்த நம்பிக்கை தளர்ந்து போயிருக்கின்றது. தனிநாட்டிற்காக போராடிய நாங்கள் சமஸ்டிக் கொள்கையின் அடிப்படையிலாவது எங்களிற்கான தீர்வுகள் வழங்கப்படவேண்டும்என்பதில் தெளிவாக இருக்கின்றோம்.

அந்தவகையில் விடுதலைப்புலிகள் மக்கள்பேரவையானது யாழ் தேர்தல்தொகுதியில் கூடார சின்னத்திலேபோட்டயிடுகின்றது. மக்கள் எம்மை ஆதரிப்பார்கள் என்று நம்புகின்றோம்.போராளிகளையும் பொதுமக்களையும் ஒற்றுமைப்படுத்தி பயணிக்க வேண்டிய நிலையில் எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE