Monday 18th of March 2024 10:47:47 PM GMT

LANGUAGE - TAMIL
.
தியாக தீபம் திலீபன் நினைவு உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் ஆதரவு! (படங்கள் இணைப்பு)

தியாக தீபம் திலீபன் நினைவு உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் ஆதரவு! (படங்கள் இணைப்பு)


சாவகச்சேரி சிவன் ஆலய வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் தியாக தீபம் திலீபனின் 33வது ஆண்டு நினைவுதின அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக் கழக மாணவர்களும் பங்கேற்றுள்ளனர்.

நீதிமன்ற தடைகள் காரணமாக, தமிழ்த் தேசியக் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

இதையடுத்து முன்னறிவுப்பு எதுவும் இன்றி திடீரென இன்று காலை முதல் தென்மராட்சி சாவகச்சேரியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் வழிபாடுகளை நடத்தி அவ் வளாகத்திலேயே அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் பலரும் பொது மக்களும் பங்கேற்று முன்னெடுத்து வரும் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தரில் மேலும் மக்கள் இணைவதை தடுக்கும் வகையில் குறித்த ஆலய வளாகத்திற்கு வெளியே விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குறித்த உணவு தவிரப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொள்வதற்காக அங்கு சென்ற யாழ் பல்கலைக் கழக மாணவர்களையும் விசேட அதிரடிப் படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இது குறித்து அறிந்த மூத்த வழக்கறிஞர் என்.சிறிகாந்தா தலையிட்டு மாணவர்கள் உணவு தவரிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தே வந்துள்ளதாகவும், அமையான முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவரிப்பு போராட்டத்தில் அவர்களை பங்Nகுற்க அனுமதிக்குமாறும் கேட்டுக் கொண்டதற்கிணங்க பல்கலைக் கழக மாணவர்களை நிகழ்விடத்திற்கு செல்வதற்கு அனுமதித்திருந்தனர்.

தமிழ்த் தேசியத்திற்கு ஏற்பட்டுள்ள ஆட்சி-அதிகார நெருக்குவாரங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை தடுக்க காவல்துரைறயினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் நிலையில் யாழ். பல்கலைக் கழக மாணவர்களும் இணைந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், தென்மராட்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE