Friday 26th of April 2024 12:40:12 AM GMT

LANGUAGE - TAMIL
-
கல்விக் கூட்டுறவுச் சங்கத்தின் யாழ்ப்பாண சேவை  திறப்பு!

கல்விக் கூட்டுறவுச் சங்கத்தின் யாழ்ப்பாண சேவை திறப்பு!


கல்விக் கூட்டுறவுச் சங்கத்தின், யாழ் மாவட்ட வாடிக்கையாளர்களின் நலன் கருதி, வாடிக்கையாளர் சேவை நிலையம் இன்று 30 ஆம் திகதி புதன்கிழமை கோண்டாவில் இந்து கல்லூரியில் திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் க.தேவராஜா இந்நிலையத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாண வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் பி.சதீஸ்குமார், சங்கத்தின் பிரதிச் செயலாளர், வடமாகாண பிரதி முகாமையாளர், வடமாகாணப் பணிப்பாளர், மேம்படுத்தல் உத்தியோத்தர் சீ.சுதாகரன், வலய முகாமையாளர் கு.சுரேன், உதவிக்கல்விப் பணிப்பாளர் சி.கணேசலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கல்விச் கூட்டறவுச் சங்கம், கல்வி சார் ஊழியர்களை நலனாகக் கொண்டு செயற்படும் ஒரு அமைப்பு. இந்நிறுவனம் இலங்கை பூராகவும் 2 இலட்சத்துக்கு அதிகமானவர்கள் அங்கத்தவர்களை கொண்டு இயங்குகின்றது.

கல்விசார் ஊழியர்களுக்கான குறைந்த வட்டி வீதத்திலான கடன்கள், ஓய்வூதியம், அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில், பல்கலைக்கழக புலமைப்பரிசில், மரணாதார கொடுப்பனவு, ஓய்வூ விடுதிகள் என பலதரப்பட்ட சேவைகளை வழங்கி வருகின்றது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE