Wednesday 8th of May 2024 03:02:14 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பிரமாண்ட ஊர்வலம்!

ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பிரமாண்ட ஊர்வலம்!


இந்துமக்கள் எதிர் நோக்குகின்ற முக்கிய பிரச்சனைகளை உள்ளடக்கிய ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் பிரமாண்ட ஊர்வலம் வவுனியாவில் இன்றுகாலை ஆரம்பமாகியது.

இப்பேரணியானது காலை 08.30மணியளவில் வவுனியா குருமன்காடு காளிகோயில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி குருமன்காட்டு சந்தி ஊடாக சென்று அங்கிருந்து புகையிரத நிலைய வீதியின் ஊடாக நகர மத்தியில் அமைந்துள்ள மனிக்கூட்டு கோபுரம் சென்று பசார் வீதியூடாக சென்று சூசைப்பிள்ளையார் குளமூடாக வவுனியா கந்தசுவாமி கோவில் முன்றலிலே இவ் ஊர்வலம் நிறைவடைந்தது.

பசு வதையை எவ்வடிவிலும் தடுத்தல் அதனை அரசாங்கத்திற்கு சட்டமாக்க கோருதல், மதமாற்றத்தை தடுத்தல் அதனை தடுக்க அரசாங்கத்தை சட்டமாக்க கோருதல், இந்துமதம் சார்ந்த புராதண இடங்கள் எல்லாவற்றிலும் இந்துமதம் சார்ந்தவர்கள் எந்தவித தடையும் இன்றி வணக்கம் செய்வதற்கு வழிபாடு செய்வதற்கு ஆவன செய்தல், ஞாயிற்றுக்கழமைகளில் அறநெறிக்கல்விக்கு முக்கியம் கொடுத்து மற்றைய வகுப்புக்கள், நிகழ்வுகளை தடைசெய்து அறநெறியை வளர்த்தல், வவுனியா மாவட்டத்திலே பல வீதிகளிற்கு, கிராமங்களிற்கு இந்து மதம் சார்ந்த பெயர்கள், காலக்கிரமத்தில் மாற்றப்படுகின்றது,வேறு மதம் சாரந்து, வேறு பெயர் சார்ந்து எங்களிற்கு எதுவிதத்திலும் தொடர்பில்லாத பெயர்கள் வருகின்றன அவற்றையெல்லாம் நீக்கப்பட்டு இந்துமதம் மற்றும் எங்களுடைய தமிழ்மொழி சார்ந்த பழமைவாய்ந்த பெயர்கள் அப்படியே இருப்பதற்கு ஆவண செய்ய வேண்டும், இந்து மத ஆலயங்கள், நெறிக்கழகங்கள், ஒன்றியங்கள் மன்றங்கள் எல்லோரும் தங்களுடைய அன்றாட கடைமைகளோடு சமுதாய வளர்ச்சிக்கு சமுதாய தொண்டினை கட்டாயம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.

ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான இந்துமக்கள் கலந்துகொண்டதுடன் இந்துகலாசாரத்தை பிரதிபலிக்கும் வாகன ஊர்திபவனியும் இடம்பெற்றிருந்தது.

ஊர்வலத்தில் நல்லைஆதினத்தின் இரண்டாம் குருமகாசந்நிதானம்,அகிலஇலங்கை இந்துசாசனத்தின் தலைவர் ஐயப்பதாசக்குருக்குள்,வேலர் சுவாமிகள் முத்து ஜெயந்திநாதக்குருக்கள், பிரபாகரக்குருக்கள்,தமிழருவி சிவகுமாரன், உட்பட நூற்றுக்ணக்கான இந்துமதக்குருக்கள், ஆலயத்தொண்டர்கள்,வர்ததகர்கள்,பொது அமைப்பினர் என பலர் கலந்துகொண்டனர்.

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT
MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT
MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE