Sunday 28th of April 2024 01:08:46 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.பல்கலைக்கழகத்தில் குழப்பம் - நடந்தது என்ன? (துணைவேந்தர் கருத்து, காணொளி)

யாழ்.பல்கலைக்கழகத்தில் குழப்பம் - நடந்தது என்ன? (துணைவேந்தர் கருத்து, காணொளி)


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இரண்டாவம் வருட மாணவர்கள் சிலருக்கும் மூன்றாம் வருட மாணவர்கள் சிலருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் போக்கை கட்டுப்படுத்த முயன்ற பல்கலைக்கழக உயர் பீடம் மீது அவதூறு ஏற்படுத்த மாணவர்கள் சிலர் முயல்வதாக பல்கலைக்கழக உயர்பீடமும், துணைவேந்தரும் விரிவுரையாளர்களும் தம்மை தாக்கியதாக மாணவர்கள் சிலரும் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேல் மாடிக் கட்டடம் ஒன்றில் இருந்த கலைப்பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் சிலரைத் தாக்குவதற்காக மூன்றாம் வருட மாணவர்கள் சிலர் தயாராக கீழ்த்தளத்தில் இருந்திருக்கின்றனர். அதன் போது தம்மைப் பாதுகாப்பாக வெளியேற உதவுமாறு பல்கலைக்கழக கலைப்பீடத்தின் விரிவுரையாளர்களிடம் இரண்டாம் வருட மாணவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

சம்பவம் தொடர்பில் துணைவேந்தரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது. இதனை அடுத்து அங்கிருந்த 2 ஆம் வருட மாணவர்களை குறித்த கட்டடத்தின் கீழ்த் தளத்துக்கு பாதுகாப்பாக அழைத்துவரும் முயற்சியில் துணைவேந்தரும் விரிவுரையாளர்களும் ஈடுபட்டு மாணவர்கள் கீழே அழைத்துவரப்பட்டிருக்கின்றனர்.

அங்கே காத்திருந்த மூன்றாம் வருட மாணவர்கள் பாய்ந்து இரண்டாம் வருட மாணவர்களைத் தாக்க முற்பட்டபோது தள்ளு முள்ளு ஏற்பட்டிருக்கின்றது. சம்பவத்தின் போது துணைவேந்தர் நிலைதடுமாறியதை அடுத்து தள்ளுமுள்ளுக்கு காரணமாணவர்களை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளும் விரிவுரையாளர்களும் பாய்ந்து பிடித்ததாக தெரியவருகிறது.

சம்பவத்தின் போது வார்தைப் பிரயோகங்கள் எல்லைமீறி இடம்பெற்றதாகவும் சம்பவத்தின் போது அங்கிருந்தவர்கள் அருவி இணையத்துக்குத் தெரிவித்தனர்.

இதனை அடுத்து துணைவேந்தரும், விரிவுரையாளர்கள் சிலர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் தம்மீது தாக்குதல் நடத்தியதாகவும் மாணவர்கள் பல்கலைக்கழக வாயிலில் அமர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

இதேவேளை இதனை அடுத்து மாணவர்கள் பல்கலைக்கழக வாயலில் அமர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதுடன் தம்மில் சிலர் மதுபோதையில் இருந்தமை தொடர்பிலான பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு பல்கலைக்கழக உயர்பீடம் முற்பட்டதாக கூறியிருந்தபோதிலும் அதனை நாளை மேற்கொள்ளுமாறு தாம் தெரிவித்ததாகவும், இன்றே பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக உயர் பீடம் வலியுறுத்தியதாகவும் மாணவர்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE