Monday 6th of May 2024 01:43:08 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழில் இருந்து சென்று முல்லைத்தீவில் பணியாற்றும் கர்ப்பவதி அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு நேர்ந்த அவலம்!

யாழில் இருந்து சென்று முல்லைத்தீவில் பணியாற்றும் கர்ப்பவதி அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு நேர்ந்த அவலம்!


யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு கரைதுறைபற்று பிரதேச செயலத்தில் பணியாற்றிவருகின்ற இரண்டு பிள்ளைகளின் தயாரான கர்ப்பவதி தாயார் ஒருவர் தொடர்ந்தும் பேருந்தில் பயணித்தமையால் குழந்தை இழந்துள்ளதுடன் அவரும் ஆபத்தான நிலையினை எதிர்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

நாளாந்த போக்குவரத்துச் சிரமம் தொடர்பில் சுட்டிக்காட்டி இடமாற்ற அனுமதி கோரியபோதிலும் பிரதேச செயலர் உடன்பட மறுத்தமையாலேயே அவருக்கும் குழந்தைக்கும் இவ்வாறான அவல நிலை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இருப்பினும் 05 11 2020 இல் குழந்தை கிடைக்கும் நிலையில் நிறைமாத கர்பிணியாக இம் மாதம் 02 10 2020 வரை அலுவலகத்திற்கு சமூகமளித்திருந்தார். தற்போது கடந்த 09 10 2020 அன்று உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர் போக்குவரத்தினால் ஏற்பட்ட அதிர்வு காரணமாக குழந்தை வயிற்றின் உள்ளேயே இறந்துள்ளது.

இதனால் குழந்தையை வெளியே எடுக்க வைத்தியர்கள் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரியவருகிறது.

சம்பவத்தினால் கர்ப்பவதித் தாயாரும் ஆபத்தான நிலையினை எதிர்கொண்டிருப்பதாகவும் சக ஊழியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE