Friday 26th of April 2024 04:14:05 PM GMT

LANGUAGE - TAMIL
.
அமெரிக்க துணை ஜனாதிபதியின் தலைமைப் பணியாளருக்குக் கொரோனா!

அமெரிக்க துணை ஜனாதிபதியின் தலைமைப் பணியாளருக்குக் கொரோனா!


அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸின் தலைமைப் பணியாளர் மார்க் ஷார்ட் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனை துணை ஜனாதிபதி பென்ஸின் செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை உறுதி செய்தார்.

இதனையடுத்து துணை ஜனாதிபதி பென்ஸ் மற்றும் திருமதி. பென்ஸ் இருவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இருவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கான அமெரிக்க தொற்று நோய் கட்டுப்பாட்டு மையத்தின் வழிகாட்டுதல்களின்படி அவர்கள் செயற்படுவார்கள் எனவும் துணை ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE