Monday 18th of March 2024 11:56:01 PM GMT

LANGUAGE - TAMIL
-
வடமராட்சியின் ராஜகிராமம் முடக்கப்படும் சாத்தியம் உள்ளது என்கிறார் பிரதேசசபை தவிசாளர்!

வடமராட்சியின் ராஜகிராமம் முடக்கப்படும் சாத்தியம் உள்ளது என்கிறார் பிரதேசசபை தவிசாளர்!


வடமராட்சியில் நேற்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவர் கரவெட்டி ராஜ கிராம பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அந்தக் கிராமத்தினைச் சேர்ந்த 70 குடும்பத் திற்கும் மேற்பட்டோர் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று அப்பகுதியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவினை பொறுத்து குறித்த பகுதி இன்று இரவிலிருந்துமுடக்கப்பட கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் த தெரிவித்தார்.

பேலியகொடை மீன் சந்தைக்கு மீன் ஏற்றி இறக்கம் கூலர் வாகன சாரதி நடத்துனர்கள் அப்பகுதியில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த முடக்கம் நடைமுறைப்படுத்தப்படலாம் எனவும் தெரிவித்தார்.

ராஜகிராமத்தில் மக்கள் மிகுந்த நெருசலாக வாழ்ந்துவருகின்ற நிலையில் அந்தக் கிராமத்தில் தொற்று கூடுதலாக ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக அந்தப் பகுதி சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE