Friday 26th of April 2024 12:47:31 AM GMT

LANGUAGE - TAMIL
.
20இன் வழியே அதிகார வலுக்குறைவே மகிந்தவை பொம்பியோ புறக்கணிக்க காரணமா?

20இன் வழியே அதிகார வலுக்குறைவே மகிந்தவை பொம்பியோ புறக்கணிக்க காரணமா?


20ம் திருத்தச் சட்டத்தின் வழியே பிரதமருக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்ட நிலையில் மகிந்தவின் அதிகார வலுக்குறைவு நிலையே பொம்பியோ புறக்கணித்தமைக்கு காரணமா என அரசியல் வட்டாரங்கள் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, பிரதமர் மஹிந்த ராஜபக்சவைச் சந்திக்காமல் சென்றமை பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் பொம்பியோ தனது இலங்கைக்கான விஜயத்தில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் என முக்கியஸ்தர்களைச் சந்திக்கவுள்ளார் என்று ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி வந்தன.

இதற்கு முன் இலங்கை வந்திருந்த சீனத் தூதுக்குழு ஜனாதிபதி, பிரதமர் என உயர்மட்டத்தைச் சந்தித்தே சென்றது.

இருப்பினும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் சந்திக்காமல் சென்றிருப்பது அரச மட்டத்திலும்கூட விமர்சனங்களை எழுப்பியுள்ளன.

இதேவேளை, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட அதேவேளையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டன.

இதன் காரணமாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ பிரதமரைச் சந்திக்காமல் சென்றிருக்கலாம் என்றும் அரசியல் மட்டத்தில் பேசப்படுகின்றது.

எவ்வாறாயினும் அரச தரப்பிலிருந்து இந்தச் சந்தேகங்களுக்கு இதுவரை பதிலளிக்கப்படவில்லை.


Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை, அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE