Friday 26th of April 2024 12:41:16 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஒரே இரவில் 7 ஏக்கர் நெற்பயிரை சேதப்படுத்திய யானைகள்!

ஒரே இரவில் 7 ஏக்கர் நெற்பயிரை சேதப்படுத்திய யானைகள்!


வவுனியா ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட இலுப்பைக்குளம் பகுதியில் ஒரே இரவில் 7ஏக்கர் நெற்பயிரை யானைகள் முற்றாக சேதப்படுத்தியுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள இலுப்பைக்குளத்திற்கு கீழ் 80 ஏக்கர் அளவில் நெற்பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் நேற்றயதினம் இரவு குறித்த வயல்பகுதிகளிற்குள் உள்நுளைந்த 50 ற்கும் மேற்ப்பட்ட யானைக்கூட்டங்கள் குடலைப்பருவத்தில் காணப்பட்ட 7 ஏக்கர் நெல்வயலை முற்றாக அழித்து நாசப்படுத்தியுள்ளது.

வங்கியில் கடன் பெற்று செய்கை பண்ணப்பட்ட நெற்பயிர்செய்கையை ஒரே இரவில் வந்து யானைகள் அழித்துச்சென்றமையால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுவரையான காலப்பகுதியில் ஒன்று இரண்டு யானைகளே வந்துசென்றிருந்த நிலையில் நேற்றையதினம் வழமைக்கு மாறாக 50 ற்கும் மேற்ப்பட்ட யானைகள் வயல்வெளிக்கு வருகைதந்து பயிரை முற்றாக சேதப்பட்டுத்திவிட்டு சென்றுள்ளது.

தகவல் தெரிந்த நாம் உடனடியாக ஓடிச்சென்று வெடிகொழுத்தி அதனை கலைக்கமுற்பட்டபோதும், அது எம்மை தாக்குவதற்காக கலைத்தமையால் பயிர்களை காப்பாற்ற முடியாதநிலை ஏற்ப்பட்டதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறனர்.

இதேவேளை ஏனைய பயிர்களையும் யானைகள் அழிப்பதற்கு முதல் எமக்கான யானை வேலிகளை அமைத்து தருமாறும் அழிவடைந்த பயிர்களிற்கான நஸ்ட ஈடுகளையும் வழங்குமாறும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE