Thursday 2nd of May 2024 12:58:00 AM GMT

LANGUAGE - TAMIL
-
வெளிவந்தது “ஆயகலை” சஞ்சிகை!

வெளிவந்தது “ஆயகலை” சஞ்சிகை!


ஆயகலை என்னும் பெயரிலான மாதாந்த சஞ்சிகையின் முதலாவது இதழ், ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் நா.யோகேந்திரநாதன் அவர்களால் அவரது இல்லத்தில் வைத்து இன்று (03.02.2021) வெளியிடப்பட்டது.

குரலோசை – நுண்கலைகளின் தாயகத்தின் இயக்குனரும் இவ்விதழின் ஆசிரியருமான வசாவிளான் தவமைந்தன் அவர்களிடமிருந்து “எங்கட புத்தகங்கள்” செயற் திட்டத்தின் இணைப்பாளர் கு.வசீகரன், யாழ்.பல்கலைக் கழக ஆங்கிலத்துறை விரிவுiரையாளர் எல்.ரமணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

சுவாமி விபுலாநந்த அடிகளாரின் சிறப்பு மலராக வெளிவந்;திருக்கும் இவ்விதழில் விபுலாநந்த அடிகளார், அறுபத்து நான்கு கலைகள், இயக்குநர் கேசவராஜன் நினைவுக் குறிப்பு, ஆடும்பாதாரம், உலகம் உவப்ப நூல் வெளியீடு, நூலாசிரியர் விபரம், கலைஞர் ஜோன்கபாஸ் நினைவரங்கு, ஜோன்கபாஸ் நினைவலைகள், நடிகர் ச.உருத்திரேஸ்வரன், மன்னாரில் நூல் வெளியீடு, வண்டியும் தொந்நியும், ஆடலரங்கம், ஈழத்தின் தமிழிசை – அரங்கேற்று விழா, நாடக அரங்கக் கல்லூரி 43 போன்ற தலைப்புக்களில் கட்டுரைகளும் செய்திகளும் வெளியாகியுள்ளன.

முத்தமிழ்க் கலைகள் பற்றிய சிந்தனைகளை மாணவர் மத்தியிலும் சாதாரண வாசகர் மத்தியிலும் கொண்டு செல்லும் முயற்சியாக “ஆயகலை” தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. இசை, நடனம், நாடகம், இலக்கியம், ஓவியம் போன்ற கலைகளை ஒரு மையத்தில் சேர்க்கும் இதழாக இச்சஞ்சிகை வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள், இளையோர் போன்றவர்களின் ஆக்கங்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் நோக்குடனும் “ஆயகலை” செயற்படும் என்று அதன் ஆசிரியர் அருவிக்குத் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE