Thursday 25th of April 2024 08:22:07 PM GMT

LANGUAGE - TAMIL
.
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் உடனான சந்திப்பு ஆக்கபூர்வமாக இருந்தது!

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் உடனான சந்திப்பு ஆக்கபூர்வமாக இருந்தது!


இன்று யாழ் வருகை தந்த நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் உடனான சந்திப்பு ஆக்கபூர்வமாக இருந்ததாக யாழ்ப்பாண வணிகர்கழக தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் முதலீடுகள் மற்றும் கடன் வசதிகள் சம்மந்தமான கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வரத்தகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலகு கடன் திட்டங்களுக்கு கால நீடிப்பு வழங்குமாறும் தற்போது உள்ள கொரோனா நிலைமையின் காரணமாக வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடன்களை பெற்றோர் அதனை திருப்பி செலுத்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தோம்.

அத்தோடு வடபகுதியில் முதலீடுகள் பலவற்றை மேற்கொள்வதற்கு உரிய முன்னேற்பாடு செய்யுமாறும் அத்தோடு ஏற்கனவே இங்கு தொழிற்சாலை இயங்கி தற்போது மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள திறப்பதற்கு ஆவணை செய்யுமாறும் கோரியிருந்தோம்.

அத்தோடு மீன்பிடித் துறையில் போருக்கு முன்னரான இலக்கினை தற்போது அடைந்து கொண்டிருக்கின்றோம். அதாவது போருக்கு முன்னர் உற்பத்தி செய்த அதே அளவு கடல் உணவுகளை நாங்கள் மீண்டும் அந்த நிலையை அடைந்து விட்டோம்.

மேலதிகமாக எமது பிரதேசம் மூன்று பகுதியும் கடலால் சூழப்பட்ட பிரதேசமாகும். கடல் வளத்தின் மூலம் பெறக்கூடிய பொருளாதார வளங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென தெரிவித்து இருந்தோம். ஆகையால் பல நாட்கள் கடலில் தங்கி நின்று மீன்பிடித்தலை மேற்கொள்ள கூடியதான படகுகளை பெற்றுத் தருவதற்கும் அதனை பயன்படுத்தி மீன்பிடித்துறை விரிவாக்கம் செய்வதற்கு எமது கடற்றொழிலாளர்களிற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்து தருமாறு கோரியிருந்தோம். உரியவாறாக பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதி அளித்திருந்தார்.

அதாவது வடக்கு மாகாணத்தில் உள்ள துறைமுகங்களை நவீன மயப்படுத்தி மீன்பிடி துறையினர் பயன்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரியிருந்தோம். அதனை அவர் சாதகமாக பரிசீலிப்பதாக கூறினார்

அவ்வாறு பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் இன்றைய சந்திப்பின் போது நாம் கருத்துக்களை தெரிவித்திருந்தோம். குறிப்பாக முதலீடு மற்றும் பொருளாதார விடயங்கள் தொடர்பில் வடக்கில் உள்ள பிரச்சனைகளை விளங்கப்படுத்தப்பட்டது. குறித்த விடயங்களை சாதகமாக பரிசீலிப்பதாக தெரிவித்திருந்த்தாக சங்கத் தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE