Friday 26th of April 2024 06:44:05 PM GMT

LANGUAGE - TAMIL
-
டோக்கியோ ஒலிப்பிக்கில் தொற்று நோய் : ஆபத்தை தவிர்க்க முடியாது - WHO எச்சரிக்கை!

டோக்கியோ ஒலிப்பிக்கில் தொற்று நோய் : ஆபத்தை தவிர்க்க முடியாது - WHO எச்சரிக்கை!


டோக்கியோ ஒலிம்பிக்கில் கொவிட்-19 தொற்று நோய் ஆபத்தை தவிர்க்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் குழுக் கூட்டத்தில் இணைய வழியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவா், தொற்று நோயைக் சரியாகக் கையாள்வதிலேயே ஒலிம்பிக் வெற்றி தங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

தொற்று நோயாளர்களை கண்டறித்து தடமறிதல், தனிமைப்படுத்துதல் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதன் மூலம் ஒலிம்பிக்கில் நெருக்கடிகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் எனவும் அவா் அறிவுறுத்தினார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் ஒலிம்பிக்குடன் தொடர்புடைய போட்டியாளர்கள், பயிற்சியாளர்கள், பணியாளர்கள் 79 பேருக்கு ஜப்பானில் இதுவரை கொரோனா தொற்று உறுதி வெய்யப்பட்டுள்ளது.

மேலும் தொற்று நோய் காரணமாக சில போட்டியாளர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. டோக்கியோவில் போட்டி இடம்பெறவுள்ள பகுதியில் பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள் உட்பட 11,000 பேர் தங்கவுள்ளனர்.

இந்நிலையிலேயே தொற்று நோய் ஆபத்தை தவிர்க்க முடியாது. எனினும் இயன்ற வரை பாதுகாப்பாக போட்டிகளை நடத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார்.

ஆபத்தே இல்லாமல் வாழ்க்கை இல்லை எனவும் குறிப்பிட்ட டெட்ரோஸ், ஜப்பான் முழு உலகிற்கும் தைரியத்தைத் தருகிறது என்றும் கூறினார். இதேவேளை, கொவிட் 19 தடுப்பூசி பகிர்வில் ஏழை நாடுகளுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

தங்களது நாடுகளில் மட்டும் முழுமையாகத் தடுப்பூசி போட்டு தொற்று நோயைக் கட்டுப்படுத்த முடியும் என செல்வந்த நாடுகள் நினைப்பது முட்டாள்தனம் என அவர் விமர்சித்தார்.

உலகளவில் இதுவரை பகிரப்பட்ட தடுப்பூசிகளில் 75 வீதம் 10 நாடுகளுக்கே கிடைத்துள்ளன எனவும் அவா் தெரிவித்தார்.

தொற்று நோயைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் உலகெங்கும் அனைத்து நாடுகளிலும் அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் குறைந்தது 70 வீதமானவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

இதற்கு அரசாங்கங்கள் உதவ வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வேண்டுகோள் விடுத்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE