Friday 26th of April 2024 04:30:11 AM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சியில் உயர்தர அனுமதிக்காக சென்ற மாணவியின் உயிரைப் பறித்த அரச பேருந்து!

கிளிநொச்சியில் உயர்தர அனுமதிக்காக சென்ற மாணவியின் உயிரைப் பறித்த அரச பேருந்து!


கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் இருந்து உயர்தரம் கற்பதற்கான அனுமதிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வருகை தந்த மாணவிகள் பாடசாலைக்கு முன்பாக ஏ9 வீதியின் மேற்கு பகுதியிலிருந்து பாடசாலை பக்கம்மஞ்சல் கடவையில் வீதியை கடந்த போது ஏற்பட்ட விபத்தில் மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, மற்றுமொரு மாணவி காயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று(15) காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் க.பொ.த சாதாரண தரம் கல்வி கற்ற மாணவிகள் மூவர் உயர்தரம் கல்விக்காக கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அனுமதி பெறுவதற்காக பாடசாலைக்கு வருகை தந்த போது இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

ஏ9 வீதியில் மேற்கு பக்கத்திலிருந்து பாடசாலை பக்கமாக மஞ்சள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது ஏ9 வீதியில் பயணித்த பட்டா ரக வாகனம் மாணவிகள் கடந்து செல்வதற்காக நிறுத்தியது.

இதன் பின் வந்த மின்சார சபை ஒப்பந்ததாரருடைய ஹன்ரர் ரக வாகனமும் நிறுத்தியிருந்த போதுபின்னால் வந்த இலங்கை போக்கு வரத்து சபையின் பேருந்து ஹன்ரர் ரக வாகனத்தை மோதியதி்ல் ஹன்ரர் வாகனம் பட்டாவுடன் மோதி குறித்த வாகனங்கள் இரண்டும் மாணவிகளுடன் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் போது சம்பவ இடத்திலயே திருவாசகம் மதுசாளினி (வயது 17 ) என்ற மாணவி இறந்ததுடன் மற்றொரு மாணவி காயமடைந்துள்ளார்.

குறித்த மாணவியின் தந்தை துவிச்சக்கர வண்டியில் நாளாந்தம் ஊற்றுப்புலத்திலிருந்து கிளிநொச்சி விறகு வெட்டி விற்பனை செய்யும் தொழிலாளியாவார்.

அவர் மிகவும் வறுமைக்குட்பட்ட நிலையில் தனது மகளைக் கற்பித்து, உயர்தரத்திற்கு அனுப்பிய நிலையில் முதல் நாளே இப் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE