Friday 26th of April 2024 03:48:32 PM GMT

LANGUAGE - TAMIL
.
ஏப்ரல்-30 இற்கு பின்னர் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு!

ஏப்ரல்-30 இற்கு பின்னர் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு!


ஏப்ரல்-30ம் திகதிக்கு பின்னர் முழுமையாக தடுப்பூசியை பெற்றவர்கள் மட்டுமே பொது இடங்களில் நடமாட அனுமதிக்கப்படும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள கொவிட்-19 தடுப்பூசி தொகை, எதிர்வரும் ஜூலை மாதத்துடன் காலாவதியாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தற்போது, இலக்கு வைக்கப்பட்டுள்ள தரப்பினருக்கான தடுப்பூசி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 6.2 மில்லியன் பேருக்கு இதுவரையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

பொது இடங்களுக்கு செல்பவர்கள், பூரண தடுப்பூசி ஏற்றத்திற்கு உள்ளாகி இருக்க வேண்டும் என்ற நடைமுறை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியின் பின்னர் அமுலுக்கு வரவுள்ளது. இதற்கமைவான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

பொதுமக்கள் பூரண தடுப்பூசி ஏற்றத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்களா? இல்லையா? என்பதை அறிந்துகொள்ள செயலி ஒன்றையோ அல்லது அட்டை ஒன்றையோ அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE