Tuesday 30th of April 2024 09:34:30 AM GMT

LANGUAGE - TAMIL
-
கால்பந்தாட்ட வீரர் பியூஸ்லஸ் மரணம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் -  ஜீ.எல். பீரீஸிடம் அடைக்கலநாதன் எம்.பி கோரிக்கை!

கால்பந்தாட்ட வீரர் பியூஸ்லஸ் மரணம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் - ஜீ.எல். பீரீஸிடம் அடைக்கலநாதன் எம்.பி கோரிக்கை!


தேசிய கால்பந்தாட்ட வீரர் யோகேந்திரன் டக்சன் பியூஸ்லஸ் மரணம் அதன் உண்மை தன்மை தொடர்பான விசாரணை உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் பேராசிரியர் .ஜீ.எல். பீரிஸ் அவர்களுக்கு இன்றைய தினம் புதன்கிழமை (2) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,

மன்னார் மாவட்டத்தின் பனங்கட்டு கொட்டு கிழக்கு கிராமத்தை தனது பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவர் தேசிய கால்பந்தாட்ட வீரர் யோகேந்திரன் டக்சன் பியூஸ்லஸ்.

இவர் 2018 முதல் இன்று வரை இலங்கையின் தேசிய கால்பந்து அணி வீரராக இருந்து வருகிறார்.

தனது விளையாட்டு திறமையால் பல சாதனைகளை படைத்த ஓர் சிறந்த வீரன். இந்த விளையாட்டு துறையில் தன்னை முற்றும் முழுவதுமாக ஈடுபடுத்தி தன்னை வளர்த்துக் கொண்டு தனது மாவட்டத்திற்கும், தாய் நாட்டிற்கு புகழை தேடித் தந்தவர். தன்னை முழுவதுமாக கால் பந்திற்காக அர்ப்பணித்த வீரன்.

அவருடைய விளையாட்டு திறமையின் நிமித்தம் மாலைதீவுக்கு வலன்சியா விளையாட்டு கழகத்தினரால் அழைக்கப்பட்டு அந்த கழகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி அங்கும் பல சாதனைகள் படைத்து பல வெற்றிக்கு வழி வகுத்தவர்.

இவ்வாறானதோர் சிறந்த விளையாட்டு வீரனின் (26.02.2022) அகால மரணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அவருடைய மரணம் கொலையா? என்ற சந்தேகத்தையும் எல்லோர் மட்டிலும் எழுப்பியுள்ளது.

எனவே இவ்வாறான ஓர் அகால மரணத்திற்கான காரணத்தை ஆராய்ந்து விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை ஆவணப் படுத்துமாறு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE