Wednesday 8th of May 2024 12:20:58 PM GMT

LANGUAGE - TAMIL
.
வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு புதிய உறுப்பினர் நியமனம்!

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு புதிய உறுப்பினர் நியமனம்!


வவுனியா வடக்கு பிரதேசசபைக்கு புதிய உறுப்பினர் ஒருவர் இன்றையதினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினராக இருந்த கனகராயன்குளத்தினை சேர்ந்த முதலாம் வட்டார வேட்பாளர் ச.தணிகாசலம் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்து தனது வெற்றிக்காக பாடுபட்ட விகிதாசார வேட்பாளருக்கு இடம் கொடுத்ததனால் குறித்த பதவிக்கு புதிய உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனத்தினை அகில இலங்கை சமாதான நீதவான் திருக்கேதீஸ்வரன் முன்னிலையில் சத்தியப் பிரமாண நிகழ்வு நடைபெற்று அதற்கான நியமன கடிதத்தை வவுனியா மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் அமைப்பாளர் ந. கருணாநிதியால் குறித்த பதவிக்கு புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்ட திருமதி ஜெயகரன் ரஞ்சினிக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE